Latest News

July 07, 2014

படகில் வந்தவர்களை திருப்பியனுப்ப ஆஸ்திரேலிய நீதிமன்றம் தடை
by Unknown - 0

ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம்கோரி படகில் சென்ற இலங்கையர்கள் 153 பேரை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கு ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
முன்னதாக, தஞ்சம் கோரி வந்த 41 பேரை கடலிலேயே விசாரித்து, நிராகரித்த பின், தமது கடற்படையினர் அவர்களை இலங்கையிடம் ஒப்படைத்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசு உறுதிசெய்துள்ள நிலையில் இந்த இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புகலிடம் கோரியவர்கள் நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேறியது குறித்த வழக்கை சந்திப்பார்கள் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த 153 பேரில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள்.
தாங்கள் இலங்கைக்குத் திரும்பிச் சென்றால் வழக்குகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
« PREV
NEXT »