அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்று அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட 41பேர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவுள்ளனர். நாடு கடத்தப்பட்ட 41பேரில் 24பேர் பெண்களாவர். அத்துடன் 9 சிறுவர்களும் அடங்குகின்றனர்.
இவர்கள் நேற்று மட்டக்களப்பு கடல் பகுதியில் அவுஸ்திரேலிய கடற்படையினரால் கையளிக்கப்பட்ட இலங்கை கடற்படையின சமுத்ரா படகில் ஏற்றிவரப்பட்டு தற்போது பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தப்பட்ட ஆண்கள் வேறொரு இடத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் 41 பேரும் நாளை காலி நீதிவான முன்னிலையி;;ல ஆஜர்செய்யப்படவுள்ளனர்.
இதன்போது சிறுவர்கள் மீது குற்றம் சுமத்தாமல் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாட்டில் இருந்து சட்டவிரோதமாக வெளியேறுவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறித்த 41பேரும் மட்டக்களப்பு துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் வைத்து கையளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
எனினும் கொழும்பில் இருந்து வீதி வழியாக 300கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள மட்டக்களப்பில் துறைமுகம் ஒன்று இல்லை என்பது குறி;ப்பிடத்தக்க விடயம் என்பதை ஏஎப்பி செய்திசேவை சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில் இந்தியாவின் பாண்டிச்சேரி கரையில் இருந்து சென்ற 153 இலங்கை அகதிகளின் நிலை குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
Social Buttons