தன்னார்வு நிறுவனங்களுக்கு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து பரிசீலிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
தன்னார்வு நிறுவனங்கள் தமது ஒழுங்குகளுக்கு அப்பால் சென்று செயற்படக்கூடாது என்று பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது செயலாளரின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த பர்ஹான் ஹக், குறித்த எச்சரிக்கை தொடர்பில் கவனமாக ஆராய்வதாக குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி பட்டறைகளை நடத்துதல் உட்பட்ட செயல்கள் மூலம் தன்னார்வு நிறுவனங்கள் தமது ஒழுங்குகளை மீறுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
Social Buttons