அல்ஜசீரா இணையத்தள ஊடகவியலாளர் டினோக் கொலம்பகே, இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கொழும்பில் நேற்று நான்கு மணிநேரம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அளுத்கம வன்முறைகள் தொடர்பாகவே இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக, அவரது சட்டவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அளுத்கம வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பாக அல்ஜசீரா செய்தியாளர் வெளியிட்ட செய்திக்கு விளக்கம் கோரும் வகையிலும், தனிப்பட்ட முறையில் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த விடயங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டதாக, இலங்கை பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
செய்தி பெறப்பட்ட முறை குறித்தும் அவரிடம் விசாரிக்கப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அல்ஜசீரா வலையமைப்புடன் கொண்டுள்ள உறவுகள் தொடர்பான டினோக் கொலம்பகேயிடம் விசாரிக்கப்பட்டதாக, அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
Social Buttons