இலங்கையில் இன்று மஹிந்த ராஜபக்சவின் நிர்வாகம் அல்ல. கோத்தபாயவின் நிர்வாகமே மேலோங்கியுள்ளது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் மஹிந்த ராஜபக்சவின் நிர்வாகம் இடமபெறுவதாக அனைவரும் எண்ணுகின்றனர்.
எனினும் நாட்டில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளின் பின்னணியிலும் கோத்தபாயவின் செல்வாக்கு உயர்ந்து காணப்படுவதாக அரச சார்பற்ற அமைப்புக்களின் பணிப்பாளர் டி எம் எஸ் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த அடிப்படையிலேயே அவர் அரசசார்பற்ற அமைப்புக்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதாக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைளை அரச சார்பற்ற அமைப்புக்கள் மேற்கொள்ள முடியாது. அது அரச சார்பற்ற அமைப்புகளின் வரம்புகளுக்கு மீறிய செயல் என்று பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்புக்களுக்கு அமைச்சு கடிதங்களையும் அனுப்பியுள்ளது.
எனினும் இந்த எச்சரிக்கையை இலங்கையின் ஜனநாயக அமைப்புக்களும் வெளிநாடுகளும் கண்டித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Social Buttons