பிரித்தானியாவுக்கு அகதிகளாக வருவோரை தடுத்து வைத்து அவசரமாக அடைக்கல கோரிக்கையைப் பரிசீலிக்கும் முறையானது சட்டரீதியற்றது என்று பிரித்தானிய மேல்நீமன்றம் ஒன்று நேற்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு நேற்று அளிக்கப்பட்டதாக இணைத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. இந்த நடைமுறைக்கு எதிராக அமைப்பு ஒன்று மனுவை தாக்கல் செய்திருந்தது.
இந்த நடைமுறையின்மூலம் அடைக்கலம் தேடிவரும் பல அகதிகள் அச்சறுத்தல்களுக்கு மத்தியிலும் அவர்களின் சொந்தநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக மனுதாரர் தரப்பு வாதிட்டது.
பிரித்தானிய அரசாங்கம் பல வருடக்காலங்களாக இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறது.
இதன்காரணமாக சொந்தநாடுகளுக்கு திருப்பியனுப்பப்படும் அகதிகள் அந்த நாடுகளில் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதாக மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியது.
இதனையடுத்து தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஓசெலி, குறித்த நடைமுறை நியாயமற்றது என்று குறிப்பிட்டார்.
இதேவேளை தடுத்து வைத்து அகதிக் கோரிக்கையை பரிசீலிக்கும் முறையானது, ஒரு நீதிமன்ற விசாரணையை போன்று அமைந்துள்ளது என்று குறித்த நடைமுறைக்குள் இருந்து விடுதலை செய்யப்பட்ட இலங்கையின் ராஜ் என்ற அகதி குறிப்பிட்டதாக இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
Social Buttons