அவுஸ்திரேலியாவுக்கு அகதி அந்தஸ்து கோரி சென்ற இலங்கையர்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று இந்திய அறிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
153 இலங்கையர்களுடன் அவுஸ்திரேலியா சென்றுள்ள படகு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
எவ்வாறாயினும் குறித்த 153 பேருடனான படகு, தமிழ் நாட்டில் இருந்தே அவுஸ்திரேலியா சென்ற நிலையில், அவர்களை இந்தியாவுக்கே திருப்பி அனுப்புவது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும் இவ்வாறான பேச்சுவார்த்தைக்கேனும் இந்தியா இணங்கவில்லை என்று அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்தப் படகில் உள்ள அகதிகளை நாடு கடத்துவதற்கு 72 மணித்தியாலத்துக்கு முன்னர் முன்னறிவிப்பு வழங்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Social Buttons