முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் நடைபெற்ற காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில், ஈபிடிபிக்கு எதிராக பெண்ணொருவர் சாட்சியமளித்திருந்தார்.
சாட்சியமளித்த குறித்த பெண்ணை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்குமாறு ஈ.பி.டி.பி. யினர் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் 2006ம் ஆண்டு எனது கணவர் வீட்டில் நின்றவேளை, வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டார் என பெண்ணொருவர் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்திருந்தார்.
அப்பெண் தெரிவித்த கருத்து உண்மையாயின், அக்கூற்றின் உண்மைத் தன்மையை வெளிக் கொணர்வதற்கு அச்சாட்சியினை குறுக்கு விசாரணை செய்ய எனது சட்டத்தரணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்க முடியுமா என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசாரணைக்கு குழுவுக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
ஈ.பி.டி.பி அரசியல் விவகாரங்களில் செயற்படும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகும். எமது கட்சி எக்காலத்திலும், எந்தப் பிரதேசத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை. குறித்த பெண்ணினால் கூறப்பட்ட வாக்கு மூலமானது உண்மைக்குப் புறம்பானதாகும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Social Buttons