வட மாகாணசபையின் ஆளுனர் பதவிக்கு மீண்டும் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சந்திரசிறியை ஜனாதிபதி மீண்டும் வட மாகாண ஆளுனராக நியமித்துள்ளார்.
இந்த தகவலை அரசாங்கத்தகவல் திணைக்களம் உறுதி செய்துள்ளது.
நேற்றுடன் ஆளுனர் சந்திரசிறியின் பதவிக் காலம் முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூன்று மாத காலத்திற்கு அவரது பதவிக் காலம் நீடிக்கப்படும் என முன்னர் எதிர்வு கூறப்பட்டிருந்தது.
எனினும், தற்போது வட மாகாண ஆளுனராக சந்திரசிறியை ஜனாதிபதி மீளவும் நியமித்துள்ளார்.
இராணுவ அதிகாரி ஒருவரை ஆளுனராக நியமித்தமைக்கு வடக்கு மாகாண சபை முதலமைச்சர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Social Buttons