Latest News

May 15, 2014

தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணிடம் இருந்து பணத்தை பெற்றுத்தருமாறு கோரிக்கை
by admin - 0

தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதி என்ற அடைக்கலம் பெற்றுள்ள பெண்ணிடம் இருந்து, தமது பணத்தை மீட்டு தருமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் தெரிவித்துள்ளது இந்த மாதம் முதல் வாரத்தில் இந்த பெண்ணும் அவரது கணவரும் இரண்டு பிள்ளைகளும்
தமிழகத்துக்கு சென்று அகதிகள் என்று அடைக்கலம் பெற்றனர். இந்தநிலையில் குறித்த பெண், பிரித்தானியாவுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி தம்மிடம் இருந்து பல மில்லியன் டொலர்களை பெற்றுக்கொண்டதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்திலும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்திலும் இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, பலர் மில்லியன் கணக்கான பணத்தை குறித்த பெண்ணிடம் வழங்கியுள்ளதுடன் கட்டுநாயக்க சர்வதேச
விமான நிலையத்தின் ஊடாக பிரச்சினையின்றி செல்வதற்காக மேலும் 2000 டொலர்களை பெற்றுக்கொண்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments