Latest News

May 15, 2014

பயங்கரவாத தடைச் சட்டத்தினை ரத்து செய்யுமாறு பிரிட்டன் விடுத்த கோரிக்கையை இலங்கை நிராகரிப்பு!
by Unknown - 0

பயங்கரவாத தடைச் சட்டத்தின் ரத்து செய்யுறுமா பிரிட்டன் அரசாங்கம் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
கோபி என்ற புலி உறுப்பினருடன் தொடர்புகளைப் பேணியவர்கள் கைது செய்யபபட்டமைக்கும் பிரிட்டன் அதிருப்தி வெளியிட்டுள்து.
பொதுநலவாய நாடுகள் மற்றும் வெளிவிவார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 424 தனிப்பட்ட நபர்கள் தடை செய்யப்பட்டமைக்கும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
பிரிட்டனில் பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் இலங்கையில் சட்டத்தை நீக்குமாறு கோருவது எந்த வகையில் நியாயமாகும் என இலங்கை அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
« PREV
NEXT »