Latest News

May 15, 2014

இலங்கைக்கு மற்றுமொரு பொறி!
by Unknown - 0

ஐக்கிய நாடுகளின் குடியேற்றவாசிகளின் மனித உரிமைகள் சம்பந்தமான விசேட பிரதிநிதியான ஃபென்கோயிஸ் க்ரோயூப் எதிர்வரும் திங்கட் கிழமை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இலங்கை வரும் அவர் 8 தினங்கள் நாட்டில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை மக்களின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அவர் தேடிப்பார்க்க உள்ளார்.
ஃபென்கோயிஸ் 2001 ஆம் ஆண்டு முதல் ஐ.நாவின் குடியேற்றவாசிகளின் மனித உரிமை தொடர்பான பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.
அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் துறைகளின் பிரதானிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அத்துடன் எதிரணி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து பேசவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை விஜயத்தின் பின்னர், தயாரிக்கும் அறிக்கையை அவர் எதிர்வரும் ஜூன் மாதம் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவிடம் கையளிக்க உள்ளார்.
« PREV
NEXT »