Latest News

May 14, 2014

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் லண்டன் நிகழ்வுக்கு தடையில்லை!
by Unknown - 0

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் லண்டனில் எதிர்வரும் 17ஆம் திகதி நடத்தவுள்ள நிகழ்வுக்கு பிரித்தானிய அரசாங்கம் தடைவிதிக்கவில்லை
இந்த செய்தியை இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழ இராச்சியத்திற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது. எனினும், இந்த தடையுத்தரவினை பிரித்தானியா ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
“இலங்கையைப் புறக்கணிப்போம்” (Say No to Sri Lanka) சர்வதேச மாநாட்டை லண்டனில் 17 ஆம் திகதியன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இது இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையை குறியாக கொண்டு செய்யப்படும் மாநாடாக அமைந்துள்ளது.
இதேவேளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மே 12 ஆம் திகதியில் இருந்து 16 ஆம் திகதிவரை பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்னால் இலங்கையில் இனப்படுகொலை தொடர்பில் கண்காட்சியை நடத்திவருகிறது.
புறக்கணிப்பு போராட்ட அனைத்துலக செயல்வீரர்கள் பங்கெடுக்கும்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
உலகின் பல்வேறு புறக்கணிப்பு போராட்டங்களில் முதன்பெற்ற செயல்வீரர்கள் பலர் சிறிலங்காவுக்கு எதிராக கூட்டிணையும் சிறிலங்கா புறக்கணிப்பு மாநாடு, லண்டனில்
இடம்பெறுவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் சிறிலங்கா அரசு தனது கடுமையான விசனத்தினை வெளிப்படுத்தி வரும் நிலையில், இம்மாநாடு குறித்தான இந்த அறிவித்தல் வெளிவந்துள்ளது.
“சிறிலங்காவைப் புறக்கணிப்போம்” எனும் இச்செயல்முனைப்பினை, பல்வேறு துறைகளுக்கும் விரிவுபடுத்தும் முயற்சியாகவும், இத் திட்டத்தை சிறப்புறச் செயற்படுத்துவதற்காகவும், இதற்குத் தேவையான தரவுகளைச் சேகரித்து இதனை முன்னெடுத்துச் செல்வதற்கான புதுமையான அரசியல், சட்டவியல் ரீதியான தந்திரோபாயங்களைக் கண்டறிவதற்காகவும் இந்த மாநாடு இடம்பெறுகின்றது.
சிறிலங்காவுக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இந்த மாநாட்டில் கிரிக்கெட் புறக்கணிப்பு செயல்வீரர் Trevor Grant, பலஸ்தீனத்தினை மையப்படுத்திய இஸ்றேல் புறக்கணிப்பு BDS அமைப்பின் பிரதிநிதி Omar Barghouti, தென்ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் பிரதிநிதிகள் Krish Govender, Roy Chetty, முன்னாள் ஐரோப்பிய பாராளுமன்ற பிரித்தானிய உறுப்பினர் Robert Evans உட்பட பல்வேறு அனைத்துலக பிரமுகர்கள் பங்கெடுக்கின்றனர்.
எதிர்வரும் மே 17ம் நாள் சனிக்கிழமை மத்திய லண்டனில் இடம்பெறவுள்ளது.
« PREV
NEXT »