தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் சிங்கள பயங்கரவாத அரசு புரிந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுக்கவே இந்தத் தொகை தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு கணக்கிட்டுள்ளது.
இலங்கை நாணயத்தின் பெறுமதியில் சுமார் இருநூறு மில்லியன் ரூபா பெறுமதியான இந்தத் தொகையை திரட்டிக் கொள்வது மற்றும் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை எவ்வாறு முன்கொண்டு செல்வது என்பன தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றுள்ளது.
இந்த நிதியை திரட்டித் தருவதற்கு பல நாடுகள் முன்வந்துள்ளதோடு பல நாடுகள் நிதியும் வழங்கியுள்ளது.
இதனையடுத்து இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக் குழுவொன்றை அமைப்பது மற்றும் அதன் பொறுப்புகள் தொடர்பில் இம்மாத இறுதிக்குள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு அறிவித்தல் ஒன்றை விடுக்கவுள்ளது.
விசாரணைக்கான நிதித் தேவையை ஐக்கிய நாடுகள் அறிவித்தவுடன் சிங்கள பயங்கரவாத அரசு பேரதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தெரிகின்றது.
Social Buttons