Latest News

May 07, 2014

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு மிரட்டல்
by admin - 0

யாழ்.பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் நேற்றுப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர் ஒன்றியங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு அச்சுறுத்தல் விடுத்தே குறித்த துண்டுப் பிரசுரங்கள் அங்கு ஒட்டப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.   'மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்க அனுமதிக்க முடியாது' என்ற தலைப்பில்' நாட்டைக் காக்கும் மாணவர் படை' என்று தம்மை அடையாளப் படுத்தியவர்களால் இந்தத் துண்டுப் பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது. இதனை அங்குள்ள பேராசிரியர்கள்இவிரிவுரையாளர்கள்இமாணவர்கள் பலரும் உறுதிப்படுத்தினர்.    அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது   பாசிசப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்து 5 ஆண்டுகள் மகிழ்ச்சியாக முடிவடைகின்ற நிலையில் மீண்டும் பயங்கரவாதம் இந்நாட்டில் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.   ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் தூபமிடுதலும் அவர்களின் கொள்கைகளைப் பின்பற்றியும் வருகின்றமை எமக்கு வேதனை அளிக்கிறது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அழிக்கப்பட்ட விடுதலைப்புலிகளால் நாமும் நம் தேசமும் எத்தனையோ கொடூரங்களைச் சந்தித்தது என்று இந்த உலகமுமே நன்றாக அறியும்.    எனவே பல்கலைக் கழகத்தில் மீண்டும் புலிகளைப் புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.   அவ்வாறான செயற்பாடுகளைத் தூண்டும் பேராசிரியர்கள்  மாணவர் ஒன்றியத் தலைவர் களை நாங்கள் நீண்டகாலமாக அவதானித்து வந்ததுடன் அவர்களுக்கு நேரடியாக எச்ச ரிக்கையும் செய்தோம். ஆனால் அது பயனளிக்கவில்லை என்று தான் கூறவேண்டும். ஏனெனில் அவர்களின் நடவடிக்கை கள் அதிகரித்துக் கொண்டு தான் செல்கின்றன.   பேராசிரியர்களின் வழிநடத்தலின் கீழ் தான் மாணவர் ஒன்றியங்கள் பயங்கரவாத நடவடிக்கைக்குத் துணைபோவதாக நாங்கள் அறிகிறோம். அவர்களுக்கு நாங்கள் இறுதி யாக எச்சரிக்கை ஒன்றை விடுக்கிறோம்.   இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூவின மக்களும் கல்வி கற்று வரும் நிலை யில் இவ்வாறான செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுக்க ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது.    எனவே பேராசிரியர்களே மாணவர் ஒன்றியத் தலைவர்களே உங்களுக்கு நாங்கள் வழங் கும் இறுதி எச்சரிக்கையாக இதை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் உங்கள் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் வழங்க முடியாது. ஒரே நாடு ஒரே மக் கள் என்றுள்ளது.    இந்தத் துண்டுப் பிரசுரம் ஒட்டப்பட்டதை அடுத்து யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் நேற்றுப் பரபரப்பான நிலைமை காணப்பட்டது. மாணவர்கள் சிலர் அந்தத் துண்டுப் பிரசுரங்களைக் கிழித்து வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
« PREV
NEXT »