Latest News

May 01, 2014

சென்னை மத்திய புகையிரத நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பு: பதற்றமான சூழ்நிலை
by admin - 0

இந்தியாவின் சென்னை மத்திய ரயில் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ள இரட்டைக் குண்டுவெடிப்புக்களில் பெண்ணொருவர் மரணமடைந்ததுடன், 10 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், இக்குண்டுவெடிப்புக்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ரயில்வே பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி ரயில் நிலையத்தில் 02 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்துள்ளன. இந்தக் குண்டுவெடிப்புக்களைத் தொடர்ந்து மேற்படி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து ரயில் பெட்டிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதன்போது, ரயில் பெட்டியொன்றின் கழிவறையில் மறைந்திருந்த இச்சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்நிலையில், இச்சந்தேக நபருக்கும் இந்தக் குண்டு வெடிப்புகளுக்கும் ஏதாவது தொடர்புள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 
« PREV
NEXT »