போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைச் சந்திப்பதற்காக, பாப்பரசர் பிரான்ஸிஸ் அடுத்த வருடம் ஜனவரி மாதம் மடுத் தேவாலயத்துக்கு வருகை தரவுள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைச் சந்திப்பதற்காக, பாப்பரசர் பிரான்ஸிஸ் அடுத்த வருடம் ஜனவரி மாதம் மடுத் தேவாலயத்துக்கு வருகை தரவுள்ளார் என்று ரோம் தகவல்கள் கூறுகின்றன.
வடக்கு - கிழக்கு மறை மாவட்டங்களின் ஆயர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே அவர் மடுவுக்கு வருகை தரவுள்ளார் என்றும் கூறப்படுகின்றது. வடக்கு - கிழக்கிலுள்ள 4 மறை மாவட்ட ஆயர்கள் உள்ளிட்ட இலங்கையின் 12 மறை மாவட்ட ஆயர்களையும் பாப்பரசர் பிரான்ஸிஸ் வத்திக்கானில் சந்தித்து வருகின்றார்.
ஒவ்வொரு ஆயர்களாக பாப்பரசரைச் சந்தித்து இங்குள்ள நிலைமைகள் தொடர்பில் விளக்கி வருகின்றனர். வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களின் நிலைமைகள் தொடர்பில் இங்குள்ள மறைமாவட்ட ஆயர்களால் திரட்டிச் செல்லப்பட்ட பல்வேறு ஆவணங்கள் பாப்பரசரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.
அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை நேரில் வந்து பார்வையிடுமாறு மறைமாவட்ட ஆயர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரையில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதற்கு பாப்பரசர் சம்மதித்துள்ளதாகவும், இந்தப் பயணத்தின் போது மன்னாரிலுள்ள மடுத் தேவாலயத்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார். மன்னார் மடுத் தேவாலயத்தில் வைத்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை அவர் சந்தித்துக்கு கலந்துரையாடவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது
Social Buttons