Latest News

May 13, 2014

தமிழர்களுக்கான பரிகார நீதிகோரி பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வு
by Unknown - 0

ஈழத் தமிழினத்தின் மீதான சிறிலங்கா அரசின் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் உச்சமாக அமைந்த முள்ளிவாய்க்கால் பெருவலியின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு புலம்பெயர் தேசமெங்கும் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

மே-18 தமிழீழத் தேசிய நாளினை மையப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கதினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பன்முகச் செயற்பாடுகளின் ஓர் அங்கமாக தமிழர்களுக்கான பரிகார நீதிகோரி, பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வொன்று, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இளையோர் மற்றும் பண்பாட்டு விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன் தொடங்கியுள்ள கவனயீர்ப்பு நிகழ்வானது மே12 நாள் திங்கட்கிழமை முதல்வாரம் முழுவதும் காலை 9:00 மணி முதல் மாலை 9:00 மணிவரை இடம்பெறுகின்றது.
கண்காட்சி, சிறிலங்கா புறக்கணிப்பு விழிப்பூட்டல் பரப்புரை, துண்டுப்பிரசுர விநியோகம், கவிதை, உரை என பல்வேறு வடிவங்களில் ஈழத்தமிழினத்துக்கு நடந்தேறிய இனப்படுகொலைக்கு பரிகாரி நீதிகோர அமையும் இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் ஒவ்வொரு நாளும் மாலை 7 மணிக்கு தெருவெளி நாடகமும், சுடரேந்திய வணக்க கூடலும் இடம்பெறுகின்றது.

இதேவேளை வரும் மே 17 ம் நாள் சனிக்கிழமை லண்டனில் இடம்பெறவுள்ள சிறிலங்கா புறக்கணிப்பு (Say No To SriLanka) மாநாட்டுக்கான  ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
« PREV
NEXT »