Latest News

May 13, 2014

யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தை மூடி­யமை அநீதி, ஆளு­ந­ராக சிவி­லி­ய­னையே நிய­மிக்க வேண்டும் : அமைச்சர் வாசு­
by Unknown - 0

யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்தை மூடி­யது அநீ­தி­யான செயற்­பா­டாகும். விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பை முதன்­மைப்­ப­டுத்­தாது தமிழ் மக்­களின் விடு­த­லைக்­காக உயிர்நீத்­த­வர்கள் எனக் கூறும் உரிமை தமிழ் மக்­க­ளுக்கு உள்­ளது என்று அரசின் பங்­கா­ளிக்­கட்­சி­யான ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.

வட மாகாண ஆளு­ந­ராக மீண்டும் படைத்­த­ரப்பைச் சார்ந்­த­வரை நிய­மிப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இதனை எதிர்ப்­ப­தா­கவும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார். இது தொடர்­பாக சமூக ஒரு­மைப்­பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்­பான அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார மேலும் தெரி­விக்­கையில்,
 
நாடு முழு­வதும் பல்­க­லைக்­க­ழ­கங்கள் இயங்­கு­கின்­றன. கல்வி நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­று­கி­றது.
 
இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழகம் மூடப்­பட்­டது அநீ­தி­யான செயற்­பா­டாகும். இதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.
 
விடு­தலைப் புலிகள் அமைப்பு இலங்­கையில் தடை செய்­யப்­பட்ட அமைப்­பாகும். எனவே அவ்­வா­றான அமைப்பின் உயி­ரி­ழந்­த­வர்­களை நினை­வு­கூ­ரு­வது சட்ட விரோ­த­மாகும்.
 
இதற்­காக யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்தை மூடு­வது பதி­லாக அமை­யாது. விடு­தலைப் புலி­களை பல்­க­லைக்­க­ழ­கத்தில் நினைவு கூரு­வதை தடை செய்து உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருக்­கலாம். அதை­வி­டுத்து பல்­க­லைக்­க­ழ­கத்தை மூடி­யது அநீ­தி­யாகும்.
 
இதே­வேளை, இரா­ணுவ மற்றும் பொலிஸ் பேச்­சா­ளர்கள் யுத்­தத்தில் இறந்த உற­வு­களை நினைவு கூர்ந்து மத அனுஷ்­டா­னங்­களில் ஈடு­ப­டு­வ­தற்கு எந்­த­வி­த­மான தடையும் இல்­லை­யென்றும் தடை செய்­யப்­பட்ட விடு­தலைப் புலி­களை நினைவு கூரு­வ­தையே தடை செய்­துள்­ள­தா­கவும் அறி­வித்­துள்­ளனர்.
 
என்னைப் பொறுத்த வரையில் விடு­தலைப் புலி­களை முதன்­மைப்­ப­டுத்­தாது தமிழ் மக்­களின் விடு­த­லைக்­காக உயிர் நீத்­த­வர்கள் என தீர்­மானம் எடுக்கும் உரிமை அதனை வெளிப்­ப­டுத்தும் உரிமை தமிழ் மக்­க­ளுக்கு உள்­ளது. இதற்கு தடை போட முடி­யாது.
 
வட மாகாண சபை ஆளு­ந­ராக ஓய்வு பெற்ற இரா­ணுவ அதி­கா­ரியே தற்­போது பதவி வகிக்­கின்றார். இத­னோடு எமக்கு உடன்­பாடு கிடை­யாது. எனவே புதி­தாக வட­மா­காண ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­ப­ட­வுள்ள வரும் பொலிஸ் திணைக்­க­ளத்தைச் சேர்ந்­தவர் ஒருவர் எனத் தெரிய வந்­துள்­ளது.
 
இதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. எனவே, சிவி­லியன் ஒரு­வரே நிய­மிக்­கப்­பட வேண்டும்.
 
ஆளுநர் நிய­மன விடயம் தொடர்பில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னோடு பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி இணக்­கப்­பாட்­டோடு ஆளுநர் நிய­மிக்­கப்­பட வேண்டும்.
 
வட மாகாண சபை செய­லாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் போன்றோர் நிய­மிக்­கப்­படும் போது மாகாண முத­ல­மைச்­ச­ரோடு பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி இணக்­கப்­பாட்­டோடு இப் பத­விகள் நிரப்­பப்­பட வேண்டும் என்றே அர­சி­ய­ல­மைப்பின் 13ஆவது திருத்­தத்தில் குறிப்­பிட்­டப்­பட்­டுள்­ளன.
 
ஆனால் மத்­திய அர­சாங்­கமோ இதனை பின்­பற்­று­வ­தில்லை. இது கவ­லைக்­கு­ரிய விடயமாகும். 
 
எதிர்க்கட்சிகள் இன்று ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு வேட்பாளர் எவருமின்றி குழம்பிப் போயுள்ளன. அந்தளவுக்கு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்ட நிலையிலேயே பொது வேட்பாளரைத் தேடுகின்றனர். பொது வேட்பாளராக முதலமைச்சர் விக்னேஸ்வரன் நியமிக்கப்பட வேண்டுமென்ற கருத்துகள் கோமாளித் தனமானவை என்றார்.
« PREV
NEXT »