திருச்சியில் சிறப்பு அகதிகள் முகாமில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், அதனை சிறைச்சாலையின் அதிகாரிகள் மறைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவரூபன் என்ற குறித்த அகதி, கடந்த 6ம் திகதி மருத்து பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, அவர் தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணத்துடன் இருப்பதாகவும் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் வைத்தியர்கள் கோரியுள்ளனர்.
எனினும் சிறைச்சாலை அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்து அவரை மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 9ம் திகதி அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த தகவலை திருச்சி காவற்துறையினர் ஊடகங்களுக்கு வழங்கவில்லை என்றும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
Social Buttons