இறுதிப்போரின் போது இறந்த உறவுகளுக்கு வடக்கு மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளமை குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் நாளாந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று நியூயோர்க்கில் நடைபெற்ற போது, கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கிய பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக், அந்த தடை குறித்து தாம் அறியவில்லை. எனினும் அது தொடர்பில் ஆராய்வதாக குறிப்பிட்டார்.
இலங்கையின் இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய கடந்த வாரம் விடுத்திருந்த எச்சரிக்கை ஒன்றில் போரில் இறந்தவர்களுக்காக பொதுநிகழ்வுகள் நடத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.
எனினும் தனிப்பட்டவர்கள் சமய நிகழ்வுகளை நடத்தலாம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில் அரசாங்கம் போர் முடிவுக்கு வந்ததாக கூறும் மே 18 ஆம் திகதியன்று மாத்தறையில் கொண்டாட்ட நிகழ்வை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Social Buttons