Latest News

May 08, 2014

முள்ளிவாய்க்கால் இன அழிப்பை துக்க தினம் என்று கூறி கொச்சைப்படுத்த வேண்டாம்!- ஓவியர் சந்தானம்
by admin - 0

முள்ளிவாய்க்கால் இன அழிப்பை துக்க தினம் என்று கூறி கொச்சைப்படுத்த வேண்டாம். எம் இனத்தை கருவறுத்தவனை கருவறுக்க ஒவ்வொரு தமிழனும் துடிக்க வேண்டும் என ஓவியர் சந்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடந்தது இன அழிப்பு, இதை தமிழின அழிப்பு நாள் என்று சொல்லவேண்டும், அல்லது இன அழிப்புக்கு பழி தீர்க்கும் நாள் என்று போரிட வேண்டும்.
உலகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனும் அதற்கான வல்லமையை பெறவேண்டும். அதற்கான நாளாக இருக்க வேண்டும் தவிர அதை துக்க தினம் என்று கொச்சை படுத்தி விட முடியாது என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.


கடைசி நாள் வரைக்கும் எம் இனத்தை கருவறுத்தவனை கருவறுக்க ஒவ்வொரு தமிழனும் துடிக்க வேண்டும், மாறாக ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி விட்டால் நிறைவடைந்துவிடும் என்று நினைத்தால் நாம் எம்மை ஏமாற்றுவதே பொருள்.
தமிழர்கள் உறக்கம் கொள்ள கூடாது. உறக்கத்தை மறக்க வேண்டும். தமிழீழம் பிறக்கும் எனும் நம்பிக்கையோடு தான் தமிழர்கள் இருக்க வேண்டும் என ஓவியர் சந்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளார் .


- நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது".தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்


« PREV
NEXT »