வடமாரட்சி பகுதியில் கடந்த 3 ஆம் திகதி காணாமல்போனதாக கூறப்படும் பருத்தித்துறை தும்பளைப் பகுதியினைச் சேர்ந்த பேரின்பநாதன் தேவகி அம்மன் என்ற பெண் புதன்கிழமை (7) கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு மயக்கமான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்.புலோலி புளியங்கியான் இந்து மயானத்திற்கு அருகிலிருந்தே இவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்து மயானத்திற்கு அருகில் பெண்ணொருவரின் சடலமொன்று இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸார் குறித்த பெண்னை மீட்டுள்ளனர்.
கடத்தப்பட்டதாக நம்பப்படும் பெண்ணொருவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் வடமராட்சியின் துன்னாலைப் பகுதியினில் மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை – கொடிகாமம் வீதியிலுள்ள துன்னாலை மயானத்திற்கு அண்மையாக இந்த வயோதிபப் பெண் இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த பேரின்பநாயகம் தேவகியம்மா (வயது 61) என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மேலும் தெரியவருகையினில் கடந்த சனிக்கிழமையன்று குறித்த பெண் தனது வீட்டில் இருந்தபோது அங்கு சென்ற சிலர் தாம் காங்கேசன்துறை பொலிஸைச் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வருமாறும் கூறிச் சென்றிருந்தனர். இந்தநிலையில் அந்தப் பெண் ஆவணங்களுடன் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் செல்வதாக உறவினர்களிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். இவ்வாறு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்தப் பெண் அங்கங்கள் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளார். தான் கடத்தப்பட்டு வாகனமொன்றினில் கொண்டு செல்லப்பட்டதாகவும் பின்னர் தடுத்து வைத்திருந்த இடத்திலிருந்து கடத்தல்காரர்களே குறித்த மயானப் பகுதியினில் வீசிச்சென்றதாகவும் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தினில் தெரிவித்துள்ளார்.
Social Buttons