Latest News

May 07, 2014

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப் புலனாய்வினர் மீண்டும் கொலை அச்சுறுத்தலை !
by Unknown - 0


யாழ் பல்கலைக்கழக சூழலில் பல்கலைக்கழக சமூகத்தை எச்சரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டியில் பீடாதிபதி, பேராசிரியர்கள் மாணவத் தலைவர்கள் எனச் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகளை இராணுவத்தரப்பே ஒட்டியிருப்பதாக கூறப்படுகிறது. மே மாதம் யாழ் பல்கலைக்கழக மாவர்கள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கொண்டாடுவதைத் தடுக்கவே ஒட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

நேற்றைய தினம் பல்கலைக்கழகம் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மூபட்படும் என யாழ் பல்கலைக்கழ பதிவாளரின் கடிதம் துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை சுவரொட்டிகள் ஒட்டப்படுள்ளன. இதில் நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க துணைபுரிவோருக்கு எதிராக கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட புலிகளை மீள உயிர்ப்பிக்க முனைவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர் ஒன்றியங்களை நீண்ட காலமாக அவதானித்து வந்து எச்சரித்தபோதும் அது பலனளிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன், பேராசிரியர்களின் வழிநடத்தல்களிலேயே மாணவர் ஒன்றியம் இயங்குவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது


பேராசிரியர்களும் பீடாதிபதியும் மாணவர்களும் இதை இறுதி எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவத்துள்ள குறித்த சுவரொட்டி இனி உயிருக்கு உத்தரவாதம் வழங்க முடியாது எனவும் எச்சரித்துள்ளது. இந்தசுவரொட்டிகளை இராணுவத்தினர் சிவில் உடையில் வந்து ஒட்டியதாகவும் சிலரிடம் இதை விநியோகித்துச் சென்றதாகவும் நேரில் பார்த்தவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
« PREV
NEXT »