மனைவியை பொல்லால் அடித்துக் கொலை செய்த கணவன் பிறிதொரு மரண வீட்டின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த போது அசலக்க பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணவனுக்கும் மனைவிக்குமிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் முற்றி ஆத்திரம் கொண்ட கணவன் பொல்லொன்றினை எடுத்து மனைவியைத் தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் மனைவி ஸ்தலத்திலேயே பலியானார்.
மொரயாய என்ற இடத்தைச் சேர்ந்த டி.எம்.சாலட் தென்னகோன் என்ற 63 வயதுடைய பெண்ணே கணவனால் தாக்கப்பட்டு மரணமானவராவார்.
இச்சம்பவம் மொரயாய என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. மனைவியை கொலை செய்த கணவன் அதே கிராமத்தில் பிறிதொரு மரண வீடொன்றிற்கு சென்று அங்கு இடம்பெற்ற இறுதி கிரியைகளில் கலந்துகொண்டார். அவ்வேளையில் அந்நபர் ஆத்திர மிகுதியினால் தன் மனைவியை கொலை செய்து விட்டேன். தற்போது எனது மனைவியின் சடலம் எனது வீட்டில் இருக்கிறது. இதுபற்றி பொலிசாருக்கு அறிவியுங்கள் என மரண வீட்டில் இருந்தவர்களிடம் கூறினார். இதையடுத்து அசலக்க பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து விரைந்த பொலிசார் கொலையுண்ட பெண்ணின் சடலத்தை மீட்டனர். அத்துடன் கொலையுண்ட பெண்ணின் கணவனையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அந்நபர் மகியங்கனை மஜிஸ்ரேட் நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதும் அந்நபர் நீதிபதியிடம் “தானே ஆத்திரம் மிகுதியினால் மனைவியை கொலை செய்து விட்டேன்” என்று கூறி கதறி அழ ஆரம்பித்தார். நீதிபதி அந்நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Social Buttons