நவீன உலகில் பெருகிவரும் தொழிநுட்ப முன்னேற்றங்களால் மனிதர்கள் பலவழிகளில் பலனடைகிறார்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லாமல் உண்மையோ அதேபோல் அசேதன இரசாயன பாவனைகளினால் பூமியின் இயற்கை அமைப்பும் அதன் தன்மையும் நாளுக்கு நாள் அழிவடைந்து வருவது என்பதுக்கும் மாற்று கருத்துக்கு இடமில்லை. அதிகரித்து வரும் சனத்தொகைக்கு ஏற்ப அவர்களுக்கான உணவுதேவையும் அதிகரிக்கிறது இதனால் உணவை உற்பத்தி செய்யும் விவசாயி பலமடங்கு தனது உற்பத்தியையும் அதிகரிக்க இரசாயன பாவனையை அதிகரிக்கிறான். இதனால் பல நோய்கள் மற்றும் துன்பத்துக்கு மனிதனும் இயற்கையும் முகம்கொடுக்கவேண்டியுள்ளது.
ஆனால் இன்றும் இயற்கையுடன் இயற்கை கிருமிநாசினிகளையும்,பசளைகளையும் பாவித்து விவசாயத்தை இயற்கையுடன் இணைந்து திறம்பட செய்யும் விவசாய மன்னர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ளார்கள் அவர்களில் ஒருவர் இணுவிலை சேர்ந்த சிறந்த விவசாயி என்ற விருது பெற்ற செல்லையா தயாபரன்.அவரின் இயற்கை விவசாயம் பற்றிய கருத்து...
ஆரம்ப காலங்களிருந்தே தான் இயற்கை விவசாயத்தை செய்யது வருவதால் உலக மக்களை பெரும் துன்பத்துக்கு ஆளாக்கி வரும் நீரழிவு,பாரிசவாதம் மற்றும் புற்று நோய் போன்ற கொடிய நோய்கள் தன்னை நெருங்கவில்லை ஆகவே அனைத்து விவசாயிகளும் ஒன்று பட்டு இயற்கை விவசாயத்தை செய்து நலன் பெறவேண்டும். உடனடியாக செய்யமுடியாவிட்டாலும் அவர்களுடைய தேவைக்கு மட்டுமாவது முதலில் வீட்டு தோட்டத்தில் இயற்கை விவசாயத்தை செய்வதால் தங்கள் குடும்பத்தை இயற்கை உணவுகளை, ஆராக்கியமான உணவுகளையும் உன்ன பழக்கி கொண்டால் வரும் காலத்தில் இயற்கையோடு அனைவரும் இணைந்து ஒன்றாக வாழலாம் இதுவே அந்த விவசாயின் கருத்து.
ஆகவே அனைத்து விவசாயிகளும் முதலில் உங்கள் குடும்பத்துக்காவது இயற்கை விவசாய உணவுகளை கொடுக்க முன்வரவேண்டும்.
Social Buttons