Latest News

April 04, 2014

வெளிநாடுகளில் இயங்கும் தமிழ் ஊடகங்களுக்கும் விரைவில் தடை?
by admin - 0

வெளிநாடுகளில் இயங்கி வரும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளுக்கு தடை விதித்த இலங்கை அரசாங்கம் அடுத்ததாக, வெளிநாடுகளில் இயங்கும் தமிழ் ஊடகங்களுக்கும் தடைவிதிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான இரகசிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலம் பெயர்ந்த மக்களின் தமிழ் தேசிய செயற்பாடுகளில், வெளிநாடுகளில் இயங்கும் தமிழ் ஊடகங்கள் பெரும் பங்கினை வகித்து வருகின்றன.
இதன்அடிப்படையில் ஏற்கனவே குறிப்பிட்ட சில இணையத்தள செய்தி ஊடகங்களை இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் தடை செய்துள்ளது. இந்த நிலையில் விரைவில் இவ்வாறான ஊடகங்களை உத்தியோகபூர்வமாக தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புலம்பெயர்ந்தோர் இலங்கையினுள் வர தடை- வெளிவந்தது பெயர்பட்டியல்!
இலங்கை அரசினால் தடை செய்யப்பட்ட 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய புலம்பெயர் தேசத்தவர்கள் 424 பேரின் பெயர் விவரங்கள் கடந்த மார்ச் 21 ஆம் திகதியிட்டு விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த பெயர் விவரங்களின் பட்டியல் அடங்கிய வர்த்தமானி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்தின் பின்னராக தலை மறைவாகியுள்ள பல போராளிகளது பெயரும் அவர்கள் எங்குள்ளார்கள் என்பது குறிப்பிடப்படாது அறிவிப்பினில் சேர்க்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »