Latest News

April 05, 2014

மன்னாரில் வயது குறைந்த நெற் செய்கை வெற்றி (படங்கள் இணைப்பு)
by admin - 0

மன்னாரில் வயது குறைந்த நெல்லின பரீட்சார்த்த பயிர்ச்செய்கை வெற்றியளித்துள்ளது.மன்னார் மாவட்டத்தில் பெரியகட்டைக்காடு கிராமத்தில் வயது குறைந்த நெல்லினங்கள் பரீட்சாத்தமாக பயிரிடப்பட்டு வெற்றியளித்தயையிட்டு நேற்று வியாழக்கிழமை வயல் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் நானாட்டான் பிரதேச செயலாளர் சி.ஏ.சந்திரஐயா, பிரதேச நீர்பாசன பொறியிலலாளர் எந்திரி ந.மயூரன் மற்றும் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் மற்றும் திணைக்களத்தின் அதிகாரிகள் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த காலபோக செய்கையில் எற்பட்ட வரட்சியினால் நெற்செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் வயது குறைந்த நெல்லினங்களின் செய்கையின் முக்கியத்துவம் பற்றி விளக்குவதற்காக இவ்விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இவ்விழாவில் பகுதியாக கருக்கப்பட்ட உமி பிரயோகத்தின் முக்கியத்துவமும் அதன் தயாரிப்பு முறை தொடர்பாகவும் குழுமியிருந்த விவசாயிகளுக்கு விரிவான செய்முறை விளக்கம் பாடவிதான உத்தியோகத்தரால் அளிக்கப்பட்டது. மேலும் உயிர்கரி உற்பத்தி தொடர்பாகவும் விரிவான செய்முறை விளக்கம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து நடுகை இயந்திரம் மூலம் நெல் நாற்றுக்களை நடும் முறை விவசாயிகளுக்கு நேரடியாக செய்முறை விளக்கம் மூலம் அளிக்கப்பட்டது. இதன்போது விவசாயிகள் இயந்திரம் இயக்குவது தொடர்பான சந்தேகங்களை ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கட்டுக்கரை திட்ட முகாமைத்துவ குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் என பலதரப்பட்ட மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



« PREV
NEXT »