Latest News

April 04, 2014

ஜெயலலிதா பிரதமராகும் நேரம் வந்துவிட்டது: மதுரை ஆதீனம்
by admin - 0

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா பிரதமராகும் நேரம் வந்துவிட்டது என்று திருச்செந்தூர் பிரசாரகூட்டத்தில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தெரிவித்தார். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரகூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் பேசியதாவது: மதுரை ஆதீனம் 2,500 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. மதுரை ஆதீனத்தின் 292-வது சன்னிதானமான இருந்து வருகிறேன்.முதன் முறையாக பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்று, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இந்த கூட்டத்தில் பேசுகிறேன். ஏனென்றால் நானும் ஒரு வாக்காளர். நாட்டை காப்பதில் எனக்கும் கடமை உண்டு. தமிழகத்தை சேர்ந்தவர்கள், உயரிய பதவியான குடியரசு தலைவர் பதவியில் இருந்துள்ளனர். ஆனால், பெருந்தலைவர் காமராஜர், மூப்பனாருக்கு பிரதமராகும் வாய்ப்பு வந்தது. அவர்கள் அதை சரியாக பயன்படுத்தவில்லை. தற்போது முதல் அமைச்சர் ஜெயலலிதா பிரதமராகும் நேரம் வந்துள்ளது. அவர் துணிச்சலான ஆற்றல் மிக்க பெண்மணி. அவர் பிரதமரானால் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து, நிச்சயம் வல்லரசாகும். எனவே அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்.இவ்வாறு மதுரை ஆதீனம் அருணகிரிநாத சுவாமி பேசினார்.
« PREV
NEXT »

No comments