Latest News

April 08, 2014

யாழில் புகையிலை அறுவடைக் காலம் ஆரம்பம்
by admin - 0

யாழ்ப்பாணத்தில் புகையிலைச் செய்கையின் அறுவடைக்காலம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில்  அறுவடை செய்யப்பட்ட புகையிலைகளை வாகனங்களில்  எடுத்துச் சென்று உலரவைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.   புகையிலைச் செய்கை மேற்கொள்ளும் பகுதிகளான  உடுவில், இணுவில்,புத்தூர், வேலணை, புன்னாலைக்கட்டுவன், கோப்பாய், தீவகம், வடமராட்சி, கரணவாய், மாண்டான், கோண்டாவில், தெல்லிப்பழை,குப்பிளான், ஏழாலை, அளவெட்டி, குரும்பசிட்டி, கைதடி, நுணாவில்,கொடிகாமம் ஆகிய பகுதிகளில் புகையிலைகள் மதில்களில் உலரவிடப்பட்டுள்ளன.    முன்னைய காலத்தில் தென்பகுதிக்கான பிரதான வியாபாரப் பொருளாக புகையிலையை  யாழ். வர்த்தகர்கள் கொண்டுசென்று விற்பனை செய்ததுடன் அதிகளவான இலாபத்தையும் பெற்றுவந்தனர்.    இருப்பினும் புகைத்தல் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக யாழ். வர்த்தகர்கள் வர்த்தக ரீதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.    மேலும்  இருக்கின்ற சந்தை வாய்ப்புக்கு தேவையான அளவு நிரம்பலை பேணும் வகையில் புகையிலைச் செய்கையாளர்கள் புகையிலைச் செய்கையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.  
« PREV
NEXT »