Latest News

April 08, 2014

மாற்று சிந்தனையாளரக்ளை ஒடுக்கும் நோக்கில் செயற்படுகிறது இலங்கை – மனித உரிமை கண்காணிப்பகம்!
by admin - 0

மாற்று சிந்தனையாளர்களை ஒடுக்கும் நோக்கிலேயே இலங்கை அசராங்கம் அமைப்புக்களை தடை செய்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் அண்மையில் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையம், 424 தனிப்பட்ட நபர்களையம் தடைசெய்து கறுப்புப் பட்டியலிட்டிருந்தது. சிறுபான்மை தமிழ் சமூகத்தின் அமைதியான போராட்டங்களை ஒடுக்கும் நோக்கிலேயே இவ்வாறான தடைகள் விதிக்கப்படுவதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய வலயப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை வாழ் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் சர்வதேச சமூகத்துடன் பேணி வரும் தொடர்புகளை துண்டிப்பதே இந்த தடையின் பிரதான இலக்கு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தடை செய்யப்பட்டுள்ள பெருமளவிலான அமைப்புக்கள் சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்டு இயங்கி வருபவை என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இயங்கி வரும் தமிழ் அமைப்புக்களை தடை செய்வதன் மூலம், இலங்கையில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு அரசாங்கம் அச்சுறுத்தல் விடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியான வழிகளில் மாற்றுச் சிந்தனைகளை வெளியிட முயற்சிக்கும் தரப்பினரை பயங்கரவாத பட்டியலில் இணைப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »