நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் சப்பறத்திருவிழா இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. சப்பறம் ஆலயத்தைச் சுற்றி மெல்ல மெல்ல அசைந்தாடி வந்த காட்சி அற்புதம்.
மங்கள வார்த்திய முழக்கமும், அடியவர்களின் அரோகராக் கோசமும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்துவதாய் அமைந்திருந்தது.நூற்றுக் கணக்கான அடியவர்கள் மத்தியில் சப்பறத்திருவிழா சிறப்புற நிறைவேறியது.நாளையதினம் தேர்திருவிழாவும் நடைபெறும்.
Social Buttons