Latest News

April 14, 2014

சங்கரன்கோவில் அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் சிறுவன் தவறி விழுந்தான்
by admin - 0

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே 400 அடி கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது சிறுவனை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

பிற்பகல் 2.05 மணி நிலவரம்

10 நிமிடங்கள் வரை பெய்த சாரல் மழை தற்போது நின்றுவிட்டது. குழந்தை 15 அடி ஆழத்தில் இருப்பதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

பிற்பகல் 2 மணி நிலவரம்

தற்போது அந்த பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிற்பகல் 1 மணி நிலவரம்

நெல்லை மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி பத்ம குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறுவன் 10.15 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்து முக்கால் மணி நேரம் கழித்துதான் எங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 12 அடி ஆழத்தில் சிறுவன் இருக்கிறான். பாறைகள் இருப்பதால் அதனை உடைக்க நேரம் ஆகிறது. அதிர்வுகள் ஏற்படாத வகையில் பாறைகள் மெதுவாக உடைக்கப்பட்டு வருகிறது. குழிக்குள் மணல் போகாதபடி கண்காணித்து வருகிறோம். குழந்தையுடன் பேசிக் கொண்டு வரும் தந்தை தைரியம் கொடுத்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் போர்வெல் போடப்பட்டுள்ளது. வறண்ட பகுதி என்பதால் தண்ணீர் வரவில்லை. இதனால் அவர்கள், குழாயை எடுத்து சென்று விட்டனர். குழாயை விட்டு சென்றுயிருந்தால் இப்படி விபத்துகள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டு இருக்காது. 3 மணி நேரத்தில் சிறுவனை மீட்டு விடுவோம்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகத்தில் 500 அடி ஆழ்துளை கிணற்றில் 3 வயது சிறுமி 16 மணி நேரத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »