வட மாகாணத்தில் மீண்டும் வெள்ளைவான்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான வெள்ளை வான்களில் கடந்த இரண்டு மாதங்களில் 70பேர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தாமும் பின்னர் கடத்தப்படுவோம் என்ற அச்சத்தில் இது தொடர்பில் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் கூட இந்த தகவலை வெளியில் கசியவிடாமல் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவ புலனாய்வுத் தரப்பினரே இவ்வாறான கடத்தல்களை மேற்கொண்டு வருவதாக அந்த பகுதியில் இயங்கும் சமூக தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன
Social Buttons