Latest News

April 27, 2014

ஓன்பது மாகாணங்களில் ஒன்பது சட்ட மா அலுவலகங்கள்!! நல்லிணக்கப் பரிந்துரையாம்!!
by admin - 0

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க பரிந்துரைகளின் படி, ஒன்பது மாகாணங்களிலும் ஒன்பது சட்ட மா அதிபர் அலுவலகங்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

நல்லிணக்க பரிந்துரையின் 9வது அம்சத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 
குற்றவியல் விசாரணைகளின் போது காவற்துறையினருக்கு ஆலோசனை வழங்கும் வகையில் இந்த காரியாலயங்கள் நியமிக்கப்படுகின்றன. 
இந்த காரியாலயங்கள் சட்ட மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இருக்கும். 

காவற்துறையினர் குற்றவியல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் போதும், கைதுகளை மேற்கொள்ளும் போது, இந்த காரியாலயங்களில் அது தொடர்பில் ஆலோசனை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
« PREV
NEXT »