Latest News

April 28, 2014

235 வருட பழமையான இயேசு ஓவியம் – எகிப்து அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு
by admin - 0

லண்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மூலம் இயேசு கிறிஸ்துவின் 235 ஆண்டுகளுக்கு முன்பான பழமையான ஓவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஜோசப் பட்ரோ தலைமையிலான புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் எகிப்தில் ஆசிரின்சஸ் என்ற இடத்தில் மண்ணில் புதைந்து கிடந்த கல்லறைகளை தோண்டி ஆய்வில் ஈடுபட்டபோது இந்த ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த சுவர் கடந்த 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை. மேலும் சுவரில் பழங்கால ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. அதில் சுருட்டை முடியுடன் கூடிய இளைஞர் ஒருவர் தனது கையை தூக்கி ஆசீர்வாதம் செய்வது போன்ற ஓவியமும் இருந்தது.

அது கற்காலத்தில் வரையப்பட்ட இயேசு கிறிஸ்துவின் பழமையான ஓவியம் என தெரிய வந்துள்ளது.இதை கடந்த 235 ஆண்டுகளுக்கு முன்பு வரைந்திருக்கலாம் என அகழ்வாராய்ச்சியாளர் ஜோசப் பார்டோ தெரிவித்துள்ளார்.




« PREV
NEXT »