வடக்கில் தொடரும் வகை தொகையற்ற கைதுகளிடையே தென்மராட்சிப் பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவர் கைதாகியுள்ளனர். பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர் ஒருவரும் அவரது குடும்பத்தவர்கள் மூவருமே மீசாலைப் பகுதியில் கைதாகியுள்ளனர்.
அவர்களது வீட்டினை மூன்று நாட்களாக சுற்றி வளைத்து இலங்கைப்படையினர் வைத்திருக்க அங்கு சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இவர்களை இரவோடிரவாக கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். அத்துடன் இக்கைது தொடர்பாக பத்திரம் ஒன்றினையும் உறவினர்களிடம் கையளித்து சென்றிருப்பதாகவும் தெரியவருகின்றது. எனினும் கைதான அவர்கள் தற்போது எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றி தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகியிருக்கவில்லை.
Social Buttons