Latest News

March 13, 2014

தளராத உறுதியுடன் 10வது நாளில் ஜெனீவாவினை நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் !
by admin - 0

தளராத உறுதியுடன் 10வது நாளில் ஜெனீவாவினை நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் !

சிங்கள அரசின் தமிழினப்படுகொலைக்கு நீதிகோரும் விடுதலைப் பயணத்தில் ஜெனீவாவினை நோக்கி லண்டனில் இருந்து புறப்பட்ட நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம், 10வது நாளாக பிரான்ஸ் மண்ணில் காலடிபதித்துச் செல்கின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிகளான திருக்குமரன் (பிரித்தானியா) , யோகேந்திரன் (கனடா) ஆகியோருடன் அமிர்தம் ஜயா(பிரித்தானியா) அவர்களும் இந்த நடைப்பயணத்தில் பங்கெடுத்துள்ளனர்.

தலைநகர் பரிசின் புறநகர் பகுதியான லாகூர்னெவ் பகுதியில் அமைந்துள்ள பிரிகேடியர் சுப.தமிழ்செல்வன் அவர்களது திருவருவச்சிலைக்கும், செவ்றோன் பகுதியில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுகல்லுக்கும், நடைபயணிகள் உணர்வாளர்கள்சூழ தங்களது மரியாதை வணக்கத்தினை செலுத்தியிருந்தனர்.

எதிர்வரும் 21ம் நாள் ஜெனீவா ஐ.நா முன்றிலினை சென்றடையவுள்ள இந்த நடைப்பயணத்தினை வரவேற்க சுவிஸ் வாழ் தமிழ்உறவுகள் தயாராகி வருகின்றனர்.

தற்போது இந்த நடைப்பயணத்தின் வழியெங்கும் ஈழத்தமிழர்களின் நீதிக்கான நியாயப்பாடுகளை பிரென்சு மொழியில் பரப்புரை பிரசுரங்களை விநியோகித்துச் செல்கின்றனர்
« PREV
NEXT »

No comments