Latest News

March 13, 2014

முகமூடி அணிந்த திருடர்களுக்கு தமிழர் கொடுத்த தர்மடி இதுதான்:
by admin - 0

பிரித்தானியாவில் சன்டர்லான் பகுதியில் நியூஸ்2000 என்ற பெயரில் தமிழர் ஒருவர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அக் கடைக்குள் நேற்று முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள் நுளைந்துள்ளார்கள். அவர்களைப் பார்த்ததும் கடை உரிமையாளர், ராசரட்ணம் ராகுலன் பின்புறமாகச் சென்றுவிட்டார். தமக்கு பயந்துதான் உரிமையாளர், பின்புறம் சென்றுவிட்டார் என நினைத்த கொள்ளையர்களுக்கு பெரும் அதிர்சி தான் காத்திருந்தது. திடீரென வந்த ராகுலன், கொள்ளையர்களை தும்புத்தடியால் தாக்கியுள்ளார். இதனால் நிலைகுலைந்த கொள்ளையர்கள், கடைக்குள் சுற்றிச்... சுற்றி ஓடியுள்ளார்கள். இறுதியில் தர்மடியை தாங்காது கடைக்கு வெளியே ஓடலாம் என நினைத்து கடையின் முன்கதவை திறந்துள்ளார்கள். அங்கே தான் இன்னும் பேரதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது.

கடையின் முன்கதவுக்கு முன்னால் இருந்த ஷட்டரை கடை உரிமையாளர் ஏற்கனவே மூடிவிட்டார். இதனால் கடையின் முன்கதவால் தப்பிக்க முடியாத நிலை கொள்ளையர்களுக்கு தோன்றியது. இப்படியே அடிமேல் அடி வாங்கி , ஒரு வழியாக பின் கதவால் அவர்கள் பின்னர் தப்பியோடியுள்ளார்கள். இதோ கடையின் CCTV கமராவில் இருக்கும் காட்சிகள். 







நன்றி ஈழம் றஞ்சன்
« PREV
NEXT »

No comments