திருகோணமலை பாலையூற்றுப் பிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிறீலங்காப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதாகத் செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாலையூற்றைச் சேர்ந்த நான்கு வயதுப் பிள்ளையின் (மகன்) தாயாரும் கர்ப்பிணியுமான பாலகுருபரன் தர்மிலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று (புதன்கிழமை) காலை 1 மணியளவில்; குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற சிங்களப் புலனாய்வாளர்கள் குறித்த பெண்ணை விசாரணைக்கு உட்படுத்தியதுடன் தந்தையின் முன் கடுமையாக அடித்துத் தாக்கியுமுள்ளார்கள். அதன் பின்னர் குறித்த பெண்ணைக் கைதுசெய்து கொழும்பில் அமைந்துள்ள நான்காம் மாடிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
நான்காம் மாடியில் அழைத்துச் சென்று பெண்ணுக்கு சித்திரவதைகளுடன் கூடிய விசாரணைகளை நடைபெறுவதாக தெரியவருகிறது. சித்திரவதைகளுக்கு உள்ளாகும் குறித்த பெண்ணின் விடுதலைக்கு குரல் கொடுக்க மனித உரிமை ஆர்வலர்கள் முன்வரவேண்டும் எனக் கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment