Latest News

March 26, 2014

தமிழீழ மாணவர் ஒன்றிய உறுப்பினர்களின் விபரங்களைத் திரட்டும் T.I.D.
by admin - 0

தமிழீழ மாணவர் ஒன்றியத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்களின் விபரங்களை பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பொலிஸார் வடக்கில் திரட்டி வருகின்றனர். மாணவர் ஒன்றியத்தில் இருந்த சிலரின் விபரங்களை இன்று பரமேஸ்வரச் சந்திக்கு அருகில் நின்று விசாரித்துள்ளனர்.சமாதான காலத்தில் மாணவர் ஒன்றியத்தின் அலுவலகம் பரமேஸ்வரச் சந்தியில் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
2002 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழீழ மாணவர் ஒன்றியம் அதிகளவான மாணவர்களை அங்கத்தவர்களாகக் கொண்டு மிகச் சிறப்பாக இயங்கி வந்ததுடன் இளையோர் மத்தியில் அரசியல் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தது. அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டில் போர் தொடங்கியதும் அதன் செயற்பாடுகள் முடங்கிப் போயின. தற்போது அதில் அங்கத்தவர்களாக இருந்தோரின் தகவல்களை கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பொலிஸார் திரட்டும் முற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
« PREV
NEXT »