இன்று இலங்கையின் மனித உரிமை மீறல் மற்றும் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் சபையில் அறிக்கையும், அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பும் நடத்தப்பட உள்ள நிலையில், அதனை எதிர்பார்த்து தமிழர் தலைமைகளும் அரச தரப்பும் காத்திருக்கும் நிலையில், நவிப்பிள்ளை அம்மையார் மண்டபத்தை வந்தடைந்தார்.
பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெறவுள்ள நிலையில் இலங்கைக்கு சார்பாகவும், எதிராகவும் பலத்த வாதப் பிரதி வாதங்கள் இடம்பெற உள்ளதுடன் பல தமிழர் அமைப்புக்ககும் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் பிரதான மண்டபத்தில் காத்திருப்பதை அவதானிக்கக் கூடியதாயுள்ளது.
இந்நிலையில் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் பிரதான மண்டபத்தை வந்தடைந்தார்.
Social Buttons