Latest News

March 26, 2014

வெளிநாட்டு தமிழர்கள் கோடைகால விடுமுறைக்கு வரட்டும் நாம் பாடம் கற்பிக்கிறோம்...
by admin - 0

கிளிநொச்சியில் உள்ள அனைத்து முன் நாள் புலிகள் உறுப்பினர்களையும் கட்டம் கட்டமாக அழைத்து இராணுவத் தலைமையகத்தில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. உங்களிடம் புலிகளின் சீருடை உண்டா ? மறைத்து வைத்திருந்தால் உடனே அவற்றை எம்மிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று கிளிநொச்சி இராணுவத் தளபதி மிரட்டியுள்ளார். சிலர் புலிகள் இயக்கத்தை மீளவும் கட்டியெழுப்ப முயல்கிறார்கள். அவர்கள் உங்களை தொடர்புகொண்டால், நீங்கள் அவர்களுக்கு உதவக்கூடாது. அப்படி உதவினால், யார் என்று பாராமல் சுட்டுத்தள்ளுவோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். நீங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று எனக்கு தெரியும். எல்லாம் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் தான் செய்கிறார்கள்.

கோடைகால விடுமுறைக்கு அவர்கள் இலங்கைக்கு சுற்றுலா வருவார்கள். அப்போது அவர்களுக்கு நான் பாடம் புகட்டுவேன் என்று கிளிநொச்சி இராணுவத் தளபதி கூறியுள்ளதாக, பொதுமக்கள் சிலர் அதிர்வுக்கு தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட இந்த பொதுமக்களையும் இலங்கை இராணுவம் அச்சுறுத்தியுள்ளது
« PREV
NEXT »