வவுனியாவில் சிங்கள குடியேற்றம், கொக்கச்சான்குளம் ‘கலா போகஸ்வெவ’ என மாறியுள்ளது – சி.வீ,.விக்னேஸ்வரன்
வவுனியாவில் பல பகுதிகளின் பெயர்கள் மாற்றப்பட்டு குடியேற்றங்கள் இடம்பெறுவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.
வவுனியாவில் பல பகுதிகளின் பெயர்கள் மாற்றப்பட்டு குடியேற்றங்கள் இடம்பெறுவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து
வவுனியாவில் இருக்கும் கொக்கச்சான்குளம், வவுனியா வடக்கை சேர்ந்தது, அதில் ஒரு பகுதி முல்லைத்தீவுக்கும் உரியது. அதாவது தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த இடம் இது. அண்மையில் வவுனியா தெற்கின் கீழ் இதனை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. அதாவது சிங்களவர் வாழும் நிர்வாக அலகில் கீழ் மாற்றியுள்ளது. கொக்கச்சான்குளம் இப்போது கலா போகஸ்வெவ என்று பெயர் மாற்றப்பட்டு, ஐயாயிரம் சிங்கள குடும்பங்களை அங்கு குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு இராணும் முழு ஒத்தாசியையும் வழங்கியிருக்கின்றது. 2009இல் உள்நாட்டில் குடிபெயர்ந்தவர்களை இருத்த உபயோகிக்கப்பட்ட மெனிக்பாம் முகாமானது, தற்போது ஸ்ரீலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. காரணங்கள் கூறப்படவில்லை.
Social Buttons