வன்னிப் பெருநிலப் பரப்பில் கடந்த வருடம் இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட தமிழ் யுவதிகள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு வருவதாகவும் அனைத்துச் சுதந்திரங்களும் இருக்கின்ற போதும் இந்தத் தொல்லையை மட்டும் சமாளிக்க முடியவில்லை எனவும் தெரிவிப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு பெரும் சர்ச்சையின் மத்தியில் சலுகைகளைக் காட்டி, இலங்கை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 103 தமிழ் யுவதிகளில் பலர் கடந்த சில வாரங்களாக கிளிநொச்சியில் உள்ள வைத்தியசாலைகளில் கருக்கலைப்பில் ஈடுபட்டு வருவதாகவும் பலர் கருத்தடைச் சாதனம் பொருத்துமாறு வைத்தியர்களை மன்றாட்டமாகக் கேட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
கடந்த 13 ஆம் திகதி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இராணுவத்தில் இணைந்தது கொண்ட 22 வயது தமிழ் யுவதி தனக்கு கருத்தடை சாதனத்தை வைக்குமாறு வைத்தியரிடம் கேட்டுள்ளார்.
எதற்காக என வைத்திய வினவிய போது, குடும்பக் கஸ்டத்தினால் இராணுவத்தில் இணைந்து கொண்ட தமக்குப் பல சலுகைகள் கிடைக்கின்ற போது இராணுவ அதிகாரிகளின் பாலியல் வல்லுறவுத் தொல்லைகளிலிருந்து தப்பிக்க முடியாதுள்ளதாகவும் எனவே கருத்தடை சாதனத்தைப் பொருத்த விரும்புவதாகவும் அந்த யுவதி தெரிவித்துள்ளார். அதற்கு வைத்திய மறுத்துள்ளார்.
இதன் பின்னர் அந்த யுவதி வேறு சிலரின் மூலம் வைத்தியருக்கு அழுத்தத்தைக் கொடுத்து கருத்தடைச் சாதனத்தைப் பொருத்திக்கொண்டு கடந்த 16 ஆம் திகதி வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
இராணுவத்தில் இணைந்து கொண்ட தமக்கு போதிய சம்பவம் கிடைக்கின்ற போதும் பாலியல் தொல்லையிலிருந்து மீளமுடியாதுள்ளதாக விடுதியிலிருந்த அனைவருக்கும் பகிரங்கமாகவே அந்த யுவதி தெரிவித்துள்ளார். தங்களின் ஒவ்வொரு படி உயர்வுக்கும் இராணுவ உயர் அதிகாரிகளினால் பாலியல் லஞ்சமே கேட்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இராணுவத்தில் இணைந்து கொள்ள வேண்டாம் எனப் பல தரப்பினராலும் தெரிவிக்கப்பட்டபோதும் இணைந்து கொண்ட இவர்களை இப்பிரச்சினையிலிருந்து இனி மீட்டுக் கொள்ள முடியாது சமூக நல ஆர்வலர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
இனி இராணுவத்தில் இணைய விரும்பும் தமிழ்ப் பெண்களாவது இந்த சம்பவத்தையடுத்து தங்களின் எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
Social Buttons