Latest News

March 13, 2014

கிளிநொச்சியில் தாயையும் மகளையும் சுற்றி வளைத்துள்ள பொலிஸ்: அச்சத்தில் கிராம மக்கள்
by admin - 0

கிளிநொச்சியில்
தாயொருவரையும் மகளையும்
பொலிஸார்
சுற்றி வளைத்துள்ளதாக
அங்கிருந்து கிடைக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பில் மேலும்
தெரியவருவதாவது, கிளிநொச்சி தருமபுரம்
முசிலம்பிட்டி வீட்டுத்திட்டத்தில் தன்
பெண்பிள்ளையுடன் கணவனையும் ஆண்
பிள்ளைகளையும் இழந்த நிலையில்
வசித்துவரும் ஜெயக்குமாரியின் வீட்டில்
புகுந்த பொலிசார் வீட்டை சுற்றிவளைத்துள்ள நிலையில்,
ஜெயக்குமாரிக்கும் கடந்த
பதினைந்து நாளுக்கு முன்னதாக பருவமடைந்த அவரது பெண் பிள்ளைக்கும் என்ன நேர்கிறது என்று தெரியாத நிலையில் அந்த
கிராமத்து மக்கள் இந்தகணம் வரை அவலப்படுகின்றனர். குறித்த பெண் பிள்ளை பருவடைந்து ஆசார
சடங்குகள் நடைபெறாத நிலையில் பொலிசார் அந்த வீட்டுக்குள்
புகுந்து இருப்பது பலருக்கும்
அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன்,
இது உள்ளுர் சர்வேச அமைப்புக்களுக்கு அறிவித்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. ஜெயக்குமாரியின் ஒரு ஆண் பிள்ளை போராட்டத்தில் வீரச்சாவடைந்ததுடன்,
இரண்டு ஆண் பிள்ளைகளை இதுவரையும்
காணாமல் கண்ணீர் சுமந்தவராக இதுவரையும் தேடிவருகின்றார். தன் பிள்ளைகளை தேடித்
தருமாறு எல்லா போராட்டங்களிலும்
ஜெயக்குமாரி கலந்துகொண்டு வருவதுடன்,
தன் பிள்ளைகள் தொடர்பாக சர்வதேசத்திடம்
நியாயம் கேட்டு வருகின்றார்.
« PREV
NEXT »

No comments