Latest News

March 13, 2014

பற்றைக்காட்டில் எலும்புக் கூடு காணாமல்போன நபருடையதா எனச் சந்தேகம்
by admin - 0

மாங்குளத்தில் உள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் எலும்புக்கூடொன்று நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏ-9 வீதியை அண்மித்த மாங்குளம் 225 - 227 ஆவது கிலோமீற்றருக்கு இடைப்பட்ட பற்றைக்காட்டுப் பகுதியிலேயே குறித்த எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.

பிரஸ்தாப எலும்புக்கூட்டுக்கு அருகில் கறுப்புநிற பையொன்றும் கறுப்புநிற ஜீன்ஸ், வெள்ளைநிற சேட் என்பன காணப்படுவதுடன் அவ்விடத்தில் அடையாள அட்டையொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட அடையாள அட்டை வவுனியா குருமன்காட்டைச் சேர்ந்த கார்த்திகேசு நிருபன் (1975-ல் பிறந்தவர்) என்ப வருடையது எனத் தெரியவருகின்றது.

மாங்குளம் வடக்கு மாதர் சங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியைத் துப்புரவு செய்தபோதே  மேற்படி எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்குச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மா.கணேசராஜா, குறித்த எலும்புக்கூடு தொடர்பில் விசாரணைகளை மேற் கொள்ளுமாறு மாங்குளம் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இதேவேளை, கடந்த 2013-ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் கார்த்திகேசு நிருபன் என்ப வர் காணாமல்போயுள்ளதாக அவரின் உறவினர்களால் மனித உரிமை ஆணைக் குழுவில் முறையீடு செய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிரஸ்தாப எலும்புக்கூட்டைப் படம் பிடித்த வலம்புரிச் செய்தியாளரின் புகைப்படக் கருவியை பறித்தெடுத்த பொலிஸார், அதிலிருந்த புகைப்படங்களை அழித்து விட்டு மீள ஒப்படைத்தனர்.            

« PREV
NEXT »

No comments