Latest News

February 07, 2014

8வது நாளாக தொடரும் ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம்
by admin - 0

ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் வெற்றிகரமாக இன்று Pijpelheide நகரத்தை வந்தடைந்தது . இன்றைய நாள் காலநிலை மழையும் குளிருமாக இருந்தபொழுதிலும் உறுதி தளராமல் தாய் மண்ணை மனதில் நிறுத்தி மனித நேயப்பணியாளர்கள் நடைபயணத்தை தொடர்ந்தனர் .
நடந்து செல்லும் பாதையில் ஈழத்தமிழர்களின் இன அழிப்பை வேற்றின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக நான்கு மொழிகளில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. நடைப்பயணம் செல்லும் பாதையில் தமிழ் மக்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உரிமையுடனும் மனிதநேய பணியாளர்களை ஆதரித்து பங்களித்தனர் . நகர இளையோர்கள் நடைப்பயணத்தில் இணைந்தும் கொண்டனர் .


« PREV
NEXT »

No comments