Latest News

February 07, 2014

அகதிகளை வழியிலேயே திருப்பி அனுப்புகிறதா ஆஸ்திரேலியா?
by admin - 0

ஆஸ்திரேலிய கடற்படை கப்பல்
ஒன்று அகதிகளை சுமந்து செல்லும்
படகு ஒன்றை இழுத்துச் செல்வதாகக் காட்டும்
வீடியோ படம் ஒன்று வெளியாகியுள்ளது. அது உண்மையென உறுதிசெய்யப்படுமானால்,
இந்தோனேசியா வழியாக
ஆஸ்திரேலியா வருகின்ற
அகதிகளை திருப்பிவிடுவது என்ற சர்ச்சைக்குரிய
புதிய கொள்கையை ஆஸ்திரேலிய அரசாங்கம்
நடைமுறைப்படுத்துகிறது என்ற அர்த்தம் ஏற்படும். ஆஸ்திரேலியாவுக்குள் அகதிப் படகு எதுவும்
வந்து ஐம்பது நாட்கள் ஆகின்றன என பிரதமர் டோனி அப்பாட் அறிவித்துள்ள தினத்தில் ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமான ஏபிசிக்கு இந்த வீடியோ கிடைத்துள்ளது. வருகின்ற அகதிகளை வழியிலேயே திருப்பி அனுப்புகிறதா என்பதை உறுதிசெய்ய
ஆஸ்திரேலிய அரசாங்கம் இதுவரை மறுத்து வந்துள்ளது.
« PREV
NEXT »

No comments