Latest News

February 02, 2014

ஏ.எப்.பி செய்தி சேவையின் பெண் ஊடகவியலாளர் கொலை
by admin - 0

ஏ.எப்.பி செய்தி சேவையின் முன்னாள் பெண் ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலை செய்யப்பட்டுள்ளார். பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு, இறந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டதாக பத்தரமுல்லை பொலிஸார் தெரிவித்தனர். குணசேகர தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். பெற்றோர்கள் தேவாலயத்திற்கு சென்றிருந்த போதே இவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பெற்றோர் வீடு திரும்பிய போது மெல் குணசேகர வீட்டில் பிணமாக கிடந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். சம்பவம் குறித்து பத்தரமுல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
« PREV
NEXT »

No comments